மலேசிய எண்ணெய் நிறுவனத்தில் சவுதி அரேபியா முதலீடு
சவுதி அரேபியாவின் அரசுத்துறை எண்ணெய் நிறுவனமான அரம்கோ, மலேசியாவில் சிங்கப்பூர் எல்லையை ஒட்டிய பகுதியில் அமையவிருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் 7 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் என மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அரம்கோ மற்றும் மலேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸிற்கு இடையே ஏற்படவிருக்கும் ஒப்பந்தம் பற்றி சவுதி அரசர் சல்மானின் விஜயத்தின் போது அறிவிக்கப்பட்டது.
இந்த முதலீடு பெட்ரோனாஸின் லாபத்தை அதிகரிக்கும், ஆனால் சவுதி அரசாங்கம் தனது ஆதிக்கத்தை அந்த பிராந்தியத்தில் நீட்டிக்க அது வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மலேசிய பிரதமர் நஜிப் சவுதி ராஜ குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார்.
கடந்த வருடம், நஜிப்பின் தனிப்பட்ட வங்கி கணக்கில் 7 லட்சம் மில்லியன் டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பில் அவர் மீது ஊழல் குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால், அது,
சவுதி ராஜ குடும்பத்தினரால் பரிசாக கொடுக்கப்பட்டது என்று கூறி அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர்கள் முடித்து வைத்தனர்.








