மாசு வெளிப்பாடு சர்ச்சையில் ரெனோ நிறுவனம் ; பிரெஞ்சு அதிகாரிகள் விசாரணை
பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ரெனோ, தனது டீசல் ரக கார்களில் மாசு வெளிப்பாடு சோதனைகளில் ஏமாற்ற முயற்சித்ததா என்பது குறித்த விசாரணையை பிரெஞ்சு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த செய்தியை அடுத்து, தொடக்கத்தில் ரெனோ நிறுவன பங்குகளின் மதிப்பு கடுமையாக சரிந்து பின் மீண்டும் அவைகளின் மதிப்பில் பெரும்பகுதியை மீண்டும் எட்டின.
ரெனோ நிறுவனம் மாசு வெளியிடல் குறித்த சட்டங்களை மதிப்பதாகவும், தன்னுடைய வாகனங்களில் எந்தவொரு ஏமாற்றும் மென்பொருளையும் பயன்படுத்தவில்லை என்றும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழனன்று, தன்னுடைய சில டீசல் வாகனங்களில் மாசு கட்டுப்பாடுகளை மீறியதாக ஃபியட் கிறிஸ்லர் கார் நிறுவனம் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் வோல்க்ஸ்வாகன் நிறுவனமானது, தன்னுடைய 11 மில்லியன் டீசல் ரக கார்களில் மாசு வெளிப்படுத்தும் சோதனையில் தப்பிக்க வடிவமைக்கப்பட்ட மென்பொருளை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்
ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்












