மசால் தோசை பர்கராகிறதாம் - மக்டொனால்ட்ஸின் கைவண்ணத்தில்!

பர்க்கர் சாப்பிடும் இளைஞர்

பட மூலாதாரம், Getty Images

இந்திய உணவுகளை ரசித்து, ருசிக்க விருப்பப்படுகிறவர்களா நீங்கள்?

அப்படியானால், பேன் கேக் போல இருக்கும் அரிசி மாவால் செய்யப்படும் தோசையில், உருளை கிழங்கால் செய்யப்பட்ட மசாலா கலவையை பரப்பி வழங்கப்படும் பிரபலமான மசாலா தோசையை பற்றி அறிய வந்திருப்பீர்கள்.

மென்டோனெல் கடை

பட மூலாதாரம், Getty Images

அத்தகைய இந்த பழமை வாய்ந்த உணவு, பர்கரின் வடிவில் கிடைக்கும் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறீர்களா? எண்ணியிருக்க மாட்டீர்கள் தானே?

மக்டொனால்ட்ஸ் அத்தகைய பர்க்கரை விற்பதற்கு திட்டமிட்டு வருகிறது.

டிவிட்டர் பதிவு

பட மூலாதாரம், @Dhichkyaaon

"தோசை பர்க்கர்" எனப்படும் உணவு வகை விரைவில் மக்டொனால்ட்ஸ் கடைகளில் விற்கப்படும் என்று தெரிய வருகிறது.

இந்த செய்தி சில டிவிட்டர் பயன்பாட்டாளர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கும் நிலையில், இந்திய உணவு வகைகளை குழப்பும் முயற்சி இது என்று சிலர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்