யாஹூவில் நிகழ்ந்த கணினி வலையமைப்பு ஊடுருவலால் ஒரு பில்லியன் பேர் பாதிப்பு

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கணினி வலையமைப்பு ஊடுருவல் (ஹேக்கிங்) சம்பவத்தில், ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயன்பாட்டாளர்களின் கணக்குகள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாஹூ கணினி வலையமைப்பு ஊடுருவலால் ஒரு பில்லியன் பேர் பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, யாஹூ கணினி வலையமைப்பு ஊடுருவலால் ஒரு பில்லியன் பேர் பாதிப்பு

இந்த ஆண்டு செப்டம்பரில் வெளிப்படுத்தப்பட்ட, 2014 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஊடுருவலில் சுமார் 500 மில்லியன் கணக்குகள் ஊடுருவப்பட்டதாக யாஹூ கூறியிருந்தது.

ஆனால், 2013 சம்பவத்துக்கும், இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான 2014ம் ஆண்டு ஊடுருவல் தொடர்பான சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று இணையதள தள பெரு நிறுவனமான யாஹூ தெரிவித்துள்ளது.

பெயர்கள், தொலைப்பேசி எண்கள் மற்றும் கடவுச்சொற்கள் (பாஸ்வேர்ட்கள்) திருடப்பட்டதாகவும், ஆனால் வங்கி மற்றும் கட்டணம் குறித்த தகவல்கள் திருடப்படவில்லை என்றும் யாஹூ தெரிவித்துள்ளது.

தற்போது, வெரிசான் என்ற நிறுவனம் மூலம் யாஹூ கையகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஊடுருவல் குறித்து போலிஸ் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.