ஏமன் உள்நாட்டு போரில் உதவுவதற்காக, ஜிபூட்டியில் செளதி அரேபிய ராணுவ தளம்
கிழக்கு ஆப்ரிக்க நாடான ஜிபூட்டியில் சௌதி அரேபியா ராணுவ தளத்தை அமைக்க இருப்பதாக, ஜிபூட்டி வெளியுறவு அமைச்சர் முகமது அலி யுசெஃப் தெரிவித்திருக்கிறார்.

ஜிபூட்டியில் இருந்து செங்கடல் கடந்து அமைந்திருக்கும் ஏமனில் நடைபெற்று வருகின்ற உள்நாட்டு போருக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணி படை, சௌதி அரேபியாவின் தலைமையில் செயல்படுகிறது.
இந்த படை நடவடிக்கைக்கு ஜிபூட்டியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ தளம் உதவும் என்று பிபிசி செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க மற்றும் பிரான்ஸ் ராணுவ தளங்களை ஏற்கெனவெ கொண்டுள்ள ஜிபூட்டியில், சீனாவும் ஒரு ராணுவ வசதியை அமைந்து வருகிறது.
சௌதி அரோபியாவுடன் நெருங்கி வருவதன் அடையாளமாக, இரானுடன் ராஜீய உறவுகளை ஜிபூட்டி ஜனவரி மாதம் துண்டித்துக் கொண்டது.








