சௌதி தொலைக்காட்சியில் பெண் பாடகியின் இசை நிகழ்ச்சி: ஆதரவும், எதிர்ப்பும்
சௌதி அரேபியாவில் பல தசாப்தங்களுக்கு பிறகு ஒரு பெண் பாடகியின் இசை நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது அந்நாட்டு இணையதள பயன்பாட்டாளர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.

பட மூலாதாரம், Kami/Getty Images
சமீப காலமாக கலாசார மாற்றங்களுக்கு உள்ளாகி வரும், முடியாட்சியின் கீழ் உள்ள அந்நாட்டில், மறைந்த உம் குல்தூம் என்னும் பாடகியின் இசை நிகழ்ச்சியை, சௌதி அரேபியாவின் அரசு தொலைக்காட்சியான அல்-தகாஃபியா ஒளிபரப்பியது.
இந்த சம்பவத்துக்கு சமூக வலைத்தளத்தில் இசை ரசிகர்களிடையே ஏகோபித்த ஆதரவு கிடைத்து வந்தாலும், பிறரால் அது கடும் கண்டனத்துக்கும் உள்ளாகி வருகிறது.
தங்களுக்கு பிரியமான பாடல் வரிகளை ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்து வந்தாலும், பழமைவாதத்தில் நம்பிக்கையுள்ள பல சௌதி அரேபியர்கள் இசையைக் கேட்பதையே பாவமாகக் கருதுகின்றனர்.
பெண்கள் வாகனம் ஓட்ட கடந்த மாதம்தான் முதல் முறையாக சௌதி அரேபியாவில் அனுமதி அளிக்கப்பட்டது.
பிற செய்திகள்
- இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி?
- ரோஹிஞ்சாக்கள் பற்றிய காணொளி: பர்மிய அழகியின் பட்டம் பறிப்பு
- லாஸ் வேகஸ் தாக்குதல் சந்தேகதாரி: சூதாட்ட பிரியர் மற்றும் உளவியல் பாதிப்பு கொண்டவர்?
- சே குவேரா நினைவஞ்சலி: பொலிவிய அரசுடன் முரண்படும் முன்னாள் ராணுவத்தினர்
- மோதி குறித்தும், விருதை திருப்பித் தருவது குறித்தும் பிரகாஷ் ராஜ் என்ன சொன்னார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









