BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
டெல்லி கார் வெடிப்பில் இன்னும் விடை தெரியாத 4 முக்கிய கேள்விகள்
டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெடிப்பு நடந்த இடத்தில் செவ்வாய்க்கிழமை காலையிலேயே புலனாய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. டெல்லி கார் வெடிப்பில் இன்னும் விடை தெரியாத 4 முக்கிய கேள்விகள் என்ன?
காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று வீட்டிலேயே புதைத்த பெண் - ஓர் ஆண்டுக்கு பின் சிக்கியது எப்படி?
ரூபி, தனது காதலனுடன் சேர்ந்து தனது கணவரை கொன்று, அவரது உடலை சமையலறையில் குழி தோண்டி புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆதாரங்களை மறைக்க அந்த குழியில் உப்பு போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
'2 நாட்களுக்கு ஒரு முறை புதிய நாடு' - ஐரோப்பிய வேலை மோசடி நடந்தது எப்படி?
ஐரோப்பிய நாடுகளில் வேலை தேடுபவர்களை போலி முகவர்கள் குறிவைத்து ஏமாற்றும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெங்களூருவில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலி முகவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள்? மக்களை அவர்கள் ஏமாற்றுவது எப்படி?
'சதிகாரர்கள் தப்பமாட்டார்கள்' - டெல்லி வெடிப்பு குறித்து பிரதமர் மோதி கூறியது என்ன?
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. வெடிப்புக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெரியவில்லை, ஆனால் கார் எங்கிருந்து வந்தது? அதன் உரிமையாளர் யார் என்பன போன்ற விவரங்களை கண்டறியும் முயற்சியில் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நேரலை, பாகிஸ்தானில் நீதிமன்றத்திற்கு வெளியே வெடிப்பு - 12 பேர் பலி
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்
எஸ்ஐஆர் படிவத்தில் வாக்காளர் நிரப்ப வேண்டியது என்ன? சந்தேகங்களும் பதில்களும்
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. எஸ்ஐஆர் படிவத்தில் நிரப்ப வேண்டிய விவரங்கள் குறித்து வாக்காளர்களிடையே சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அரசியல் கட்சிகளும் கூட சில சந்தேகங்களை எழுப்பியுள்ளன. எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவத்தில் வாக்காளர்கள் நிரப்ப வேண்டியது என்ன?
பாகிஸ்தானுடன் இணையும் நவாப் விருப்பத்திற்கு மாறாக 'ஜூனாகத்' இந்தியாவுடன் இணைந்த கதை
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, ஹைதராபாத், காஷ்மீர், ஜூனாகத் ஆகிய மூன்று சுதேச அரசுகள் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
காணொளி, காணொளி: டெல்லி கார் வெடிப்பு நிகழ்விடத்தில் பிபிசி தமிழ் கண்டது என்ன?, கால அளவு 1,33
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். நிழ்விடம் எப்படி இருக்கிறது என்பதை பிபிசி செய்தியாளர் விளக்குகிறார்.
'மூன்று முறை விழுந்தேன்': டெல்லி கார் வெடிப்பை நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?
Delhi Red fort Blast சம்பவத்தின் போது சம்பவ இடத்தில் இருந்தவர்கள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் பிபிசியிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களைக் கேட்கலாம்.
அபினய்: தனுசுடன் ஒரே படத்தில் அறிமுகமானவர் அதன் பிறகு என்ன ஆனார்?
'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் அபினய், சென்னையில் காலமானார்.
'தூத்துக்குடி, தென்காசியைச் சேர்ந்த 5 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்' - என்ன நடந்தது?
மாலியில் மின் தொடரமைப்புதுறையில் பணியாற்றிய தமிழர்கள் ஆயுதம் தாங்கிய நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களின் நிலை என்ன?
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா இடையே ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம் ஏன்?
அண்டை மாநிலங்களில் விதிக்கப்படும் அபராதங்கள் காரணமாக தென் மாநிலங்களுக்கு இடையிலான ஆம்னி பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது .
குறுங்காணொளிகள்
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
நீங்கள் வேறிடம் மாறியிருந்தால் அல்லது வீடு பூட்டியிருந்தால் என்ன ஆகும்? எஸ்ஐஆர் பற்றிய பிபிசி கள ஆய்வு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் எப்படி நடக்கின்றன? அதற்காகக் கொடுக்கப்படும் படிவத்தில் என்ன கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும்?
இந்தியாவில் இன்றும் தொடரும் 'தேவதாசி' முறை - அந்த பெண்கள் என்ன செய்கிறார்கள்?
கர்நாடகாவில் சட்டம் போட்டு தடுத்தாலும் தேவதாசி முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இளம் வயதிலேயே இந்துக் கடவுள்களின் சேவைக்காக பெண்கள் அர்ப்பணிக்கப்படுவது ரகசியமாக நடக்கவே செய்வதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. தேவதாசி முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்கிறார்கள்?
இந்திய கிரிக்கெட் அணி தேர்வு எப்படி நடக்கிறது?- சர்ச்சையும், நிபுணர்களின் விளக்கமும்
இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அணித் தேர்வு குறித்து கேள்விகள் எழுவது இது முதல் முறை அல்ல. நெடுங்காலமாகவே அது இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் தொடர்ந்து இப்படியான கேள்விகள் எழுவது ஏன்? எதன் அடிப்படையில் இந்தத் தேர்வுகள் நடக்கின்றன? அணித் தேர்வில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் என்னென்ன? வர்ணனையாளர்கள், பயிற்சியாளர்கள், கேப்டன்கள் என கிரிக்கெட் வல்லுநர்கள் பி.பி.சி தமிழிடம் இதுபற்றிப் பேசியிருக்கிறார்கள்.
இந்தியாவில் காவல்துறை, அதிகார மட்டத்தில் 'சாதி' எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது?
இந்தியாவின் அதிகாரத்துவத்தின் ஆரம்ப மட்டத்தில் தலித் மற்றும் பழங்குடி அதிகாரிகளின் இருப்பு காணப்பட்டாலும், உயர் பதவிகளில் அவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தே காணப்படுகிறது. இந்திய அதிகாரத்துவத்தில் கொள்கை மற்றும் நீதிக்கான முடிவுகள் எடுக்கப்படும் இடங்கள் இன்னமும் சாதியிலிருந்து விடுபடவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
இப்போது எப்படி இருக்கிறது காஸா? - போரின் பேரழிவை நேரில் கண்ட பிபிசி
காஸாவிலிருந்து செய்தி நிறுவனங்கள் சுயாதீனமாக செய்தி சேகரிக்க இஸ்ரேல் அனுமதிப்பதில்லை. புதன்கிழமையன்று, பிபிசியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் உட்பட சிலரை காஸா முனையில் இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றது.
செய்தியாளரின் கேள்வியால் நடிகை கௌரி கிஷன் கோபம்: அதர்ஸ் பட ஊடக சந்திப்பில் என்ன நடந்தது?
தனது எடை குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு நடிகை கவுரி கிஷன் காட்டமாக பதிலளித்துள்ளார்.
இலங்கையில் நிழலுலக குழுக்களிடம் ராணுவ துப்பாக்கிகள் சென்றது எப்படி?
இலங்கையில் சமீபகாலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், நிழலுக குழுக்களிடம் ராணுவ துப்பாக்கிகள் இருப்பதாக ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.
'கடலில் விழுந்து 26 மணி நேரம் நீந்தினேன்' - உயிர்தப்பிய சிவமுருகனின் சிலிர்க்க வைக்கும் அனுபவம்
நண்பர்கள் மற்றும் சகோதரர் என 16 பேருடன் ஒரு விசைப் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற சிவமுருகன், கடலில் தவறி விழுந்து, தத்தளித்து, 26 மணிநேரங்களுக்குப் பிறகே மீட்கப்பட்டார்.
இந்தியாவில் வாழ்ந்த பிரமாண்ட 'வாசுகி' பாம்பின் உணவும் வேட்டை முறைகளும் என்ன? ஆய்வாளர்கள் தகவல்
இந்தியாவின் கட்ச் பகுதியில் கிடைத்த, 4.7 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வாசுகி இண்டிகஸ் என்ற பாம்புதான் உலகிலேயே நீளமான பாம்பா? அதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
வெளிநாட்டில் தனக்கிருந்த ஒரே ஒரு ராணுவ தளத்தையும் இந்தியா காலி செய்தது ஏன்?
இந்தியா தஜிகிஸ்தானில் உள்ள அய்னி விமானத் தளத்தை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு காலி செய்துள்ளது. இது வெளிநாட்டில் இந்தியாவுக்கு இருந்த ஒரே ராணுவத் தளமாக இருந்தது.
பூண்டு உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கு சிறந்ததா? பூண்டு உலகெங்கும் பரவிய வரலாறு
வரலாற்றிலும் பல கலாச்சாரங்களிலும் பூண்டு எப்படிப் பயணம் செய்தது என்பதை இங்கே பார்க்கலாம். மருத்துவ பயன்பாடுகளிலிருந்து நாட்டுப்புறக் கதைகள் வரை, உலகம் முழுவதும் அது எப்படி ஒரு முக்கிய பொருளாக மாறியது என்பது இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்


























































































